Questions? +1 (202) 335-3939 Login
Trusted News Since 1995
A service for political professionals · Thursday, October 3, 2024 · 748,578,895 Articles · 3+ Million Readers

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை: இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு - வேதனையில் ஈழத்தமிழர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இரண்டாவது கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

CHENNAI, INDIA, October 2, 2024 /EINPresswire.com/ --

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும்இந்திய மத்திய அரசிற்கு ஒத்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது.

இவ்விடயத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றக் கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இரண்டாவதுகடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்திற்கு தனது தார்மீக, அரசியல் மற்றும்சட்டபூர்வ ஆதரவை தமிழக அரசிடம் கோருகின்றோம் என அக்கடிதத்தில் கோரியுள்ள பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்கள், தெற்காசியப் பகுதியில் உள்ள தமிழர்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும்உரிமையும், கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது அறிவிப்பின்படி, செப்டம்பர் 27-28 ஆகிய நாட்களில், விடுதலைப் புலிகள்மீதான இந்தியாவின் தடை குறித்தான தீர்ப்பாய விசாரணைகள் இடம்பெற இருக்கின்றன.

இவ்விவகாரம் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன்அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

'மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகாலப் பேரவலம் குறித்து தமிழகத்தில் மாநாடு நடத்துவதற்கானஅனுமதியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியபோது, அதற்கான அனுமதியினை மறுத்து சென்னைகாவல் கண்காணிப்பாளர் அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தமிழீழத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட புலம்பெயர்ஈழத்தமிழர்களின் ஒர் அரசியல் அமைப்பெனவும், இந்த அமைப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதோடு, நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும்,அவர்கள் இந்தியாவில் நடத்தப்படும் நிகழ்வுகளின் போதுவிடுதலைப் புலிகளுடனான கருத்தியல் உறவை வெளிப்படுத்துவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன எனசென்னை காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.'

'தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழகஅரசும் ஆவணங்களை சமர்ப்பித்து, இந்திய மத்திய அரசிற்கு ஒத்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது பெரும்வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசானது ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமானபோராட்டத்திற்கு தனது தார்மீக, அரசியல், சட்டப்பூர்வமான ஆதரவை வழங்கி இனப்படுகொலைக்கான நீதியைநிலைநாட்ட வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும். மேலும், 1991ம் ஆண்டு முதல் தமிழீழவிடுதலைப் புலிகள் தொடர்பில் இத்தகைய நிலைப்பாட்டை கடைப்பிடித்து வரும் தமிழக அரசு, 2009க்குப்பிறகு மாறிய அரசியல் சூழலுக்கு ஏற்ப தங்கள் நிலைப்பாட்டை மேம்படுத்த வேண்டக் கோருகின்றோம்' எனபிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இரண்டாவதுகடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும்என்றும், தெற்காசியப் பகுதியில் உள்ள தமிழர்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் உரிமையும், கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு என நம்புவதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் எழுதிய கடிதத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


* நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி
About Transnational Government of Tamil Eelam (TGTE)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.

2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, நாலாவது தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.

இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை, என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.

தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன்,

தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.

Follow us on Twitter: @TGTE_PMO
Email: pmo@tgte.org
Web: www.tgte-us.org

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
X
Instagram

Powered by EIN Presswire

Distribution channels: Human Rights, International Organizations, Media, Advertising & PR, Politics, World & Regional

Legal Disclaimer:

EIN Presswire provides this news content "as is" without warranty of any kind. We do not accept any responsibility or liability for the accuracy, content, images, videos, licenses, completeness, legality, or reliability of the information contained in this article. If you have any complaints or copyright issues related to this article, kindly contact the author above.

Submit your press release